August 17, 2017
தண்டோரா குழு
தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு இடைக்காலத் தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நீட் தேர்வால் பாதிக்கப்பட்டவர்கள் விவரம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய அரசு, தமிழக அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் பதில் தர வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும், எந்த மாணவரும் பாதிக்கப்படாத வகையில் அவசர சட்டம் இருக்க வேண்டும் எனவும், நீட் தேர்வால் பாதிக்கப்பட்ட அனைத்து மாணவர்களின் விபரங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இதற்கு மருத்துவ கவுன்சில் ஆகஸ்ட் 22 ம் தேதி பதில் தர வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.