May 24, 2017 தண்டோரா குழு
அதிக இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதால் மருத்துவ மேற்படிப்புக்கான கட்-ஆஃப்மதிப்பெண்னை மத்திய அரசு குறைத்துள்ளது.
இதக்குறித்து மத்திய சுகாதாரதுறை அமைச்சகம் கூறியிருப்பதாவது,
அதிக இடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளதால் மருத்துவ மேற்படிப்புக்கான பொது பிரிவினருக்கான கட்ஆப் மதிப்பெண் 42.5 %ஆகவும், மாற்றுத் திறனாளிகளுக்கு 37.%, மற்றும் இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கு 32.5ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
மேலும் மருத்துவ கவுன்சிலுடன் ஆலோசித்து இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. வரும் 2017- கல்வி ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,கட்-ஆஃப் குறைக்கப்பட்டதால் 9000 மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.