February 14, 2017 தண்டோரா குழு
சசிகலா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் மறுசீராய்வு மனுத்தாக்கல் செய்தாலும் சசிகலாவுக்கு வெற்றி கிடைப்பது குறைவே என்று முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சோரப்ஜி கூறியுள்ளார்.
ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் சசிகலா உள்ளிட்ட மூவரும் குற்றாவாளிகள் என்று தீர்ப்பளித்தது. இதையடுத்து சொத்துக் குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட மூவருக்கு எதிராக வழங்கப்பட்டுள்ள தீர்ப்பை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என மக்களவைத் துணைத் தலைவர் தம்பிதுரை கூறியுள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த முன்னாள் அட்டர்னி ஜெனரலான சொலி சொரப்ஜி,
“இந்த வழக்கில் சசிகலா தரப்பினர் சீராய்வு மனு தாக்கல் செய்தாலும், அதற்கு வெற்றி வாய்ப்பு மிக குறைவாகத்தான் இருக்கும். எனவே, இன்று வழங்கப்பட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டேர் சிறைத் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும். அத்துடன் தண்டனைக்கான அபாரதத்தை பறிமுதல் செய்யப்பட்ட சொத்துகளிலிருந்து நீதிமன்றம் வசூலித்தே தீரும்” என்றும் குறிப்பிட்டுள்ளார்.