February 24, 2022
தண்டோரா குழு
கோவையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலிதாவின் 74வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 74வது பிறந்த தினத்தையொட்டி கோவை மாவட்ட அதிமுக.,வினர் கட்சி தலைமை அலுவலகத்தில் இருந்து ஊர்வலமாக சென்று அவினாசி ரோட்டில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர், கட்சி அலுவலகத்தில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, கட்சி கொடியேற்றி இனிப்புகள் வழங்கினர்.இதில், மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் கே.ஆர் ஜெயராம் எம்.எல்.ஏ, மற்றும் கட்சி நிர்வாகிகள் சிங்கை முத்து, காட்டூர் செல்வராஜ், வெண்தாமரை பாலு, உள்ளிட்ட அ.தி.மு.க.நிர்வாகிகள் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.