September 28, 2017 தண்டோரா குழு
மலேசியா நாட்டு மக்கள் வட கொரியவிற்கு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
வட கொரியாவுடன் நட்புடன் இருந்து வந்த நாடுகளில் மலேசியாவும் ஒன்று. ஆனால், ஐநா சபையின் உத்தரவை மீறி, வட கொரியா கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை சோதனை செய்தது.மேலும், வட கொரியாவின் தொழிலாளர் கட்சியின் தலைவர் கிங் ஜாங் சகோதரர் மலேசியா விமானநிலையத்தில் கொலை செய்யப்பட்ட பிறகு, இரு நாடுகளுக்கு இடையே இருந்த உறவின் விரிசல் ஏற்பட்டது.
இந்நிலையில், மலேசியா நாட்டு மக்கள் வட கொரியாவிற்கு செல்ல தடை விதித்திருப்பதாகவும்,அந்நாட்டின் வெளியுறவு துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
மேலும்,வரும் அக்டோபர் மாதம் 5ம் தேதி வட கொரியாவின் தலைநகரான ப்யோங்யாங்கில் நடைபெறவிருந்த ஆசிய கால்பந்து போட்டியில் மலேசியா கால் பந்து அணியும் வட கொரியா அணியும் போட்டியிட இருந்தது. பாதுகாப்பு காரணமாக இந்த போட்டி இரண்டு முறை தள்ளிவைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.