• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மலையாள நடிகர் சுரேஷ் கோபியின் தம்பியை கைது செய்த கோவை போலீசார் !

March 21, 2022 தண்டோரா குழு

கேரளத் திரை உலகில் பிரபலமாக உள்ளவர், நடிகர் சுரேஷ் கோபி. இவர் மலையாளம் மட்டுமின்றி தமிழ் உள்ளிட்டப் பல்வேறு மொழிப்படங்களிலும் நடித்துள்ளார்.இவருக்கு மூன்று சகோதரர்கள் உள்ளனர்.

இந்நிலையில், சுரேஷ் கோபியின் இரண்டாவது சகோதரர் சுனில் கோபி.இவர் நீதிமன்றம் ரத்து செய்த நிறைய ஆவணங்களை வைத்து நிலத்தை விற்க முயற்சி செய்ததாகக்கூறி, கோவை ஜி.என். மில்ஸ் பகுதியைச் சேர்ந்த கிரிதரன் என்பவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.

இதைத் தொடர்ந்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த குற்றப்பிரிவு காவல் துறையினர் நேற்று காலை சுனில் கோபியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுகுறித்து காவல் துறையினர் தரப்பில் கூறுகையில்,

‘சுனில் கோபி கோவை நவக்கரை பகுதியில் மயில்சாமி என்பவரது 4.52 ஏக்கர் நிலத்தை முதலில் வாங்கியுள்ளார். அதற்கான பத்திரப்பதிவு நடைபெற்ற நிலையில் பத்திரப்பதிவு செல்லாது என நீதிமன்றம் அறிவித்துள்ளது.இதனைத்தொடர்ந்து நீதிமன்றத் தகவலை மறைத்து, சுனில் கோபி கோவை ஜி.என்.மில்ஸ் பகுதியைச் சேர்ந்த கிரிதரன் என்பவருக்கு அதனை விற்றுள்ளார்.

அந்நிலத்திற்கு கிரிதரன் முன்பணமாக ரூ.97 லட்சம் வெவ்வேறு வங்கிக்கணக்கில் வழங்கிய நிலையில்,அந்த நிலத்தின் ஆவணங்களை சரி பார்த்தபோது,அந்த நிலம் வேறு ஒருவருடைய பெயரில் இருந்தது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், சுனில் கோபியைத் தொடர்பு கொண்டு இது குறித்து கேட்டுள்ளார்.

ஆனால், அவரிடமிருந்து எந்த ஒரு முறையான பதிலும் வராததால் சுனில் கோபி மீது கிரிதரன், கோவை மாவட்ட குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் புகார் அளித்தார்.இதைத் தொடர்ந்து, இந்தக் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக’ காவல் துறையினர் தெரிவித்தனர்.

மேலும் மூன்று வங்கிக் கணக்கில் இந்தப் பணத்தை சுனில் கோபி பெற்ற நிலையில், அந்த வங்கிக் கணக்கு உடைய மற்ற 2 பேரின் மீதும் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளதாகத் தெரிவித்தனர்.

மேலும் படிக்க