December 12, 2022 தண்டோரா குழு
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் ரூ.40.07 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வருகின்றன.இப்பகுதியில் அலங்கார வளைவுகள், பூங்காக்கள் அமைப்பது, மிதிவண்டி நடைபாதை அமைப்பது போன்ற பணிகள் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதில் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சேகரமாகும் மழைநீரை நிலத்துக்குள் அனுப்பும் திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் ஒரு பகுதியாக திட்ட சாலை சந்திப்பில் இருந்து சுங்கம் சாலை சந்திப்பு வரை 990 மீட்டர் நீளத்தில் ஜெர்மன் தொழில்நுட்பத்தில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் ரேஸ்கோர்ஸ் பகுதியில் சாலைகளில் வழிந்துஓடும் மழை நீரை சேமிக்கும் பொருட்டு 25 இடங்களில் ஜெர்மன் தொழில்நுட்பத்தின் கீழ் மழை நீர் உறிஞ்சு தொட்டி கட்டமைப்பு அமைக்கும் பணி தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.