• Download mobile app
13 Dec 2025, SaturdayEdition - 3594
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மழையும் பெய்யும், வெயிலும் அடிக்கும் – சென்னை வானிலை ஆய்வு மையம்

May 17, 2017 தண்டோரா குழு

தமிழகத்தில் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது, அதே சமயம் சில இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகவும் வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது;

“ஆந்திரபிரதேஷ மாநில பகுதிகளில் அதிக வெப்பநிலை நிலவுகிறது. இதனால் அங்கு பல இடங்களில் வெப்பநிலை இயல்பை விட 8 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகியிருந்தது.

அப்பகுதிகளில் இருந்து வரும் வடமேற்கு காற்று தமிழகத்தை நோக்கி வீசுகிறது. இதனால் தமிழகத்தின் உள்மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் வெப்பநிலையானது இயல்பை விட அதிகமாக 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவானது.

அதிகபட்சமாக நேற்று திருத்தணியில் 45 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவானது. தமிழகத்தில் இதே வெப்பநிலை 2 நாளுக்கு தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வெப்பசலனம் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரிரு இடங்களில் மழை பெய்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் உள் மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சென்யைில் ஒரிரு இடங்களில் சாரல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

வெப்பநிலையானது அடுத்த 2 நாளுக்கு சில இடங்களில் 40 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.“

இவ்வாறு பாலசந்திரன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க