• Download mobile app
13 Dec 2025, SaturdayEdition - 3594
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி பெறாமல் இயங்கும் தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – விவசாயிகள் கோரிக்கை

March 25, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் சமீரன் தலைமையில் விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடந்தது.

இதில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்ட தலைவர் சு.பழனிசாமி பேசியதாவது:

கோவை மாவட்டம் சூலூர் அருகே கணியூர், பதுவம்பள்ளி,மாதப்பூர் முத்து கவுண்டன்புதூர் போன்ற கிராம பஞ்சாயத்துக்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் உரிமை பெறாமல் பல்வேறு தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.இதனால் விவசாய நிலங்களில் நிலத்தடி நீர் மாசடைவது உடன், காற்று மாசுபடுகிறது.உடனடியாக மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே பள்ளிபாளையம்,சிறுமுகை-அன்னூர் செல்லும் பாதையில் அனுமதியற்ற முறையில் கனிமவளத் துறை மூலம் முறையான அனுமதி பெறாமல் கனிம வளங்கள் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

மாவட்டத்தில் விவசாயம் மற்றும் குடிநீருக்கு மிக முக்கியமான நீர் ஆதாரமாக நொய்யல் ஆறு உள்ளது.இந்த ஆற்றை அளவீடு செய்து முட்புதர்கள்,ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.கருவேப்பிலை குறித்து வேளாண் பட்ஜெட்டில் இடம்பெறவில்லை.கோவை மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவிற்கு மேட்டுப்பாளையம்,காரமடை பகுதிகளில் கருவேப்பிலை விவசாயம் செய்து வருகின்றனர். எனவே கோவை மாவட்டத்தில் கருவேப்பிலை மையம் அமைக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க