July 10, 2017 தண்டோரா குழு
வாகனங்களில் கொண்டு செல்லும் இறைச்சி மாட்டிறைச்சியா என்று தெரிந்துக்கொள்ள புதிய கருவி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
தற்போது நாடெங்கிலும் மாட்டிறைச்சிக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்த தடையால், மக்கள் பல அவதிகளை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில், கைப்பற்றப்படும் இறைச்சி மாட்டிறைச்சி தானா? என்று கண்டுபிடிக்க புதிய கருவி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கருவியானது ‘எலிசா’ என்னும் நோய் எதிர்ப்பு நுட்பத்தை அடிப்படையாக கொண்டது. இந்தக் கருவியை ஹைதராபாத் நகரை சேர்ந்த தலைமை அறிவியல் அதிகாரி ஜெயந்த் பானுஷாலி என்பவர் உருவாக்கியுள்ளார்.இதனுடைய விலை 8,000 ரூபாய் ஆகும். இந்த கருவி மூலம் நடத்தப்படும் சோதனையின் முடிவு 3௦ நிமிடங்களில் தரப்படும். தற்போது இந்த கருவி மகாராஷ்டிரா மாநிலத்தின் காவல்துறைக்கு தரப்பட்டுள்ளது.
இது குறித்து தடவியல் நிபுணர் ஜெயந்த் பானுஷாலி கூறுகையில்,
“ வாகனங்களில் எடுத்து செல்லப்படும் இறைச்சி குறித்து வீண் சந்தேகம் ஏற்படுகிறது. இதனால் உண்மை என்ன என்று அறியாமல் குற்றம் சுமத்துவது, தேவையில்லாமல் மனித உயிர்கள் கொல்லப்படுவது போன்ற சம்பவங்கள் நடந்துக்கொண்டு வருகிறது.தற்போது இதனை தடுப்பதற்கு இந்த கருவி உபயோகமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.