May 30, 2017 தண்டோரா குழு
மத்திய அரசு கொண்டு வந்துள்ள மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசு உரிய நேரத்தில் நடவடிக்கை எடுக்கும் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் மாடுகளை சந்தைகளில் விற்பனை செய்ய தடை விதித்து மத்திய அரசு புதிய சட்டம் கொண்டு வந்துள்ளது.இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கேரளா மற்றும் பாண்டிசேரி அரசும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், இதுவரை தமிழக அரசு எந்தவித நிலைப்பாடும் எடுக்காமல் இருந்து வருகிறது.
இந்நிலையில், சென்னை நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்த கொண்ட அமைச்சர் ஜெயக்குமார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர்,
மாட்டிறைச்சி விவகாரத்தில் நடப்பவற்றை தமிழக அரசு உற்று கவனித்து வருகிறது. ஆகையால் உரிய தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், மத்திய அரசு இணக்கமாக இருப்பதால் தான் திட்டங்களை பெற முடியம். இதனால் பினாமி அரசு என்று எங்களை விமர்ச்சிகலாமா? நான் மீண்டும் கூறுகிறேன் மாட்டிறைச்சி விவகாரத்தில் உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்போம் என்றார்.