June 15, 2017 தண்டோரா குழு
மாட்டிறைச்சி விவகாரத்தில் மத்திய அரசின் அரசாணைக்கு தடை விதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இறைச்சிக்காக மாடுகள் வாங்கவும், விற்கவும் சில கட்டுப்பாடுகள் விதித்து மத்திய அரசு உத்தரவிட்டது.இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. பல்வேறு அமைப்புகளும் மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தன. மாட்டிறைச்சிக்கு எதிராக கேரள சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, ஐதராபாத்தை சேர்ந்த தொண்டு நிறுவனம் ஒன்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.இந்த வழக்கு மீதான விசாரணை இன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்றது.
அப்போது, மத்திய அரசின் சட்டத்திற்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்த உச்ச நீதிமன்றம், இரண்டு வார] காலத்திற்குள் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தது.