June 20, 2017
தண்டோரா குழு
மாட்டிறைச்சி விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் கேட்ட கேள்விக்கு முதலமைச்சர் பதிலலித்துள்ளார்.
சட்டப்பேரவையில் இன்று மாட்டிறைச்சி தடைக்கு எதிராக திமுக சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அப்போது தடைக்கு எதிராக மேகாலயா, கேரளா,புதுச்சேரி மாநிலங்களில் தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது என ஸ்டாலின் சுட்டிக்காட்டினார். மேலும் தமிழக அரசு இந்த விவகாரத்தில் மௌனமாக இருப்பது ஏன்? என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி,
தமிழகத்தில் பசுவதைத் தடைச் சட்டம் 40 ஆண்டுகாலமாக அமலில் உள்ளது என்றும் மக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு செயல்படும் என்றார்.
மேலும், பெரும்பான்மையான மக்கள் மாட்டிறைச்சி விவாகரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று கூறிய அவர் மாட்டிறைச்சி விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்புக்கு பின்னர் தான் தமிழக அரசு முடிவெடுக்கும் என்றார்.
இதையடுத்து முதலமைச்சரின் பதிலில் திருப்தி இல்லை எனக் கூறி திமுக உறுப்பினர்கள் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். திமுகவுக்கு ஆதரவு தெரிவித்து காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினரும் அதிமுக ஆதரவு எம் எல்ஏக்கள் தனியரசு, கருணாஸ், தமீமுல் அன்சாரி ஆகியோரும் வெளிநடப்பு செய்தனர்.