March 12, 2022 தண்டோரா குழு
கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி நிறுவனம் மாணவர்களிடையே ஆர்ட்டிபிஷியல், இன்டெலிஜென்ஸ் மெஷின் லேர்னிங் திறன்களை மேம்படுத்தும் வகையில் டீப் ரேசர் லீக் போட்டி 2 நாட்கள் நடைபெற்றது.இந்த போட்டியில் பங்கேற்க 574 மாணவர்கள் முன்பதிவு செய்திருந்தனர்.202 மாணவர்கள் கலந்து கொண்டனர்.
152 மாணவர்கள் தங்களது டீப் ரேசர் மாதிரிகளை செயல்முறைபடுத்தினர்.23 மாணவர்களுடைய மாதிரிகள் அரையிறுதிக்கு தேர்வு செய்யப்பட்டது.லீக் போட்டியின் 2ம் நாள் நிகழ்வு அரையிறுதி போட்டியுடன் தொடங்கியது. மாணவர்கள் மற்றும் டெவலப்பர் என இரு பிரிவுகளில் இறுதிப் போட்டிகள் நடத்தப்பட்டன. ஏ டபிள்யூஎஸ் அகாடமி அமேசான் நிறுவனத்தின் தொழில்நுட்ப திட்ட மேலாளர்விஷ்ரம் தாட்டே, ஏ டபிள்யூஎஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப உதவி மேலாளர் ஜே. மதுகிரன் மற்றும் தர்சன் மாணவர்கள் பிரிவின் நடுவராக இருந்து வெற்றி பெற்ற மாணவர்களை தேர்ந்தெடுத்தனர்.
கே.ஜி.ஐ .எஸ்.எல் நிறுவனத்தின் இயக்குனர் உஷா வாழ்த்துரையை வழங்கினர்.தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் செயலாளர் சீனிவாசன், கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் அசோக் பக்தவச்சலம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
நிகழ்வின் நிறைவாக வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிகழ்வில் ரூ.40 ஆயிரம் மதிப்புள்ள முதல்பரிசு கோவை கேஜி பொறியியல் கல்லூரி மாணவி கவுசிபிரியாவுக்கும்,ரூ.30 ஆயிரம் பரிசு கோவை ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் கல்லூரி மாணவர் மதன பாலாவுக்கும் வழங்கப்பட்டது.
கே.ஜி கலை அறிவியல் கல்லூரியின் துணை முதல்வர் கிருஷ்ணபிரியா பரமசிவம் நன்றி உரையை வழங்கினார்.