• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாணவர்களுக்கு இடையூறாக கொண்டாட்டம் வேண்டாம்- ஸ்டாலின்

March 1, 2017 தண்டோரா குழு

‘ப்ளஸ் 2’ பொதுத் தேர்வுகள் தொடங்குவதால், பிறந்தநாள் கொண்டாட்டத்தின் போது மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் ஒலிபெருக்கியைப் பயன்படுத்த வேண்டாம் என்று திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் கட்சியினரைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

“வியாழக்கிழமை (மார்ச் 2) தொடங்கும் ‘ப்ளஸ் 2’ தேர்வை எழுதும் மாணவ மாணவியருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தங்களின் அடுத்த கட்ட கல்லூரி வாழ்க்கையைத் தொடங்குவதற்கு மிக முக்கியமான இந்தத் தேர்வில் மாணவ-மாணவியர் அதிக மதிப்பெண்கள் பெற்று வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

இந்த நேரத்தில் என் பிறந்த நாளை திமுகவினர் இளைஞர் எழுச்சி நாளாக மாநிலம் முழுவதும் கடைப்பிடித்து, மக்கள் நலம் பயக்கும் உதவிகளைச் செய்து வருவது மகிழ்ச்சியும் மனநிறைவும் தருகிறது.

அவ்வாறு பிறந்த நாள் நிகழ்ச்சிகளை நடத்தும் கழக நிர்வாகிகள் ‘ப்ளஸ் 2’ தேர்வுக்கு இடையூறு விளைவிக்கும் விதத்தில் ஒலிபெருக்கி (லவுட் ஸ்பீக்கர்) போன்றவற்றைப் பயன்படுத்தி மாணவர்கள் படிப்பதற்குத் தொந்தரவு செய்ய வேண்டாம். தங்களின் எதிர்காலத்திற்கான மிக முக்கியமான தேர்வை மாணவர்கள் எழுதும் இந்த நேரத்தில் ஆடம்பரம், ஆரவாரம் இன்றி மிகவும் அமைதியான முறையில் பிறந்த நாள் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு, மாணவர்கள் வெற்றிகரமாக தேர்வு எழுத வழிவிடுமாறு கழக நிர்வாகிகளை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்”.

இவ்வாறு மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க