December 12, 2022
தண்டோரா குழு
கோவை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்டு வரும் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிக்காக, ஒன்றிய அரசு சார்பில் வழங்கப்பட்ட விருதை, மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா அன்மையில் பெற்றுக்கொண்டார். அதனை இன்று மாநகராட்சி கமிஷனர் பிரதாப் இடம் ஒப்படைத்தார்.
கோவை மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் திட்டப்பணிகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. சூயஸ் நிறுனத்துடன் இணைந்து மாநகரில் 100 வார்டுகளிலும் இத்திட்டப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இத்திட்டத்தில்,மின் ஆளுமையை முன்னெடுத்து சிறப்பாக செயல்படுத்தியதற்காக ஒன்றிய அரசு சார்பில் விருது வழங்கப்பட்டுள்ளது.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் அன்மையில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இந்த விருது வழங்கப்பட்டது. இதை, மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா பெற்றுக்கொண்டார்.
அதனை இன்று மாநகராட்சி ஆணையாளர் பிரதாபிடம் ஒப்படைத்தார்.