November 16, 2022 தண்டோரா குழு
கோவையில் மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளியின் சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாக்கத்தான் நடைபெற்றது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை மான்செஸ்டர் இன்டர்நேஷனல் பள்ளியின் சார்பில் போதைப்பொருள் இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் எனவும்,போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக வாக்கத்தான் நடைபெற்றது.
இதனை கோவை மாநகர காவல் துறை ஆணையர் பாலகிருஷ்ணன் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.இதில் மாணவர் பேரவை தலைவர் குருசரண், எஸ்.டி தர்ஷன் தலைமை வகித்த இதில் பள்ளி தலைவர் ராஜேஷ் வாசுதேவன், நிர்வாகத் தலைவர் நந்தகிஷோர், மாணவர் மேம்பாட்டு துறை தலைவர் கீதா மற்றும் 200க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்று பதாகைகள் ஏந்திய படி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.