• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மார்க்கெட் ரேட் படி” ஷெட்யூல் ஆப் ரேட்’ விலை ஏற்றம் கோரி வரும் 10ம் தேதி முதல் அடையாள வேலை நிறுத்தம் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் அறிவிப்பு

February 26, 2024 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தின் தலைவர் உதயகுமார், செயலாளரும் கேசிபி இன்பரா நிறுவன நிர்வாக இயக்குனருமான சந்திர பிரகாஷ், பொருளாளர் அம்மாசையப்பன் ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் கோவை மாநகராட்சியில் ஒப்பந்ததாரர்கள் பல்வேறு பணிகளை வேகமாக செய்து வருகிறார்கள். தற்போது ஜல்லி, எம் சாண்ட்,ப்ளூ மெட்டல் ஆகியவற்றின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.திட்ட பணிகளுக்கான மதிப்பீட்டுத் தொகையை விட 30 சதவீதம் கூடுதலாக மூலப்பொருட்களின் விலை உயர்ந்திருக்கிறது.

பழைய விலையில் திட்ட பணிகளை செய்தால் ஒப்பந்ததாரர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் நிலைமை இருக்கிறது.
இந்த திடீர் விலை உயர்வை schedule of rates ல் force’ majeure clause என்ற பிரிவின் கீழ் விலை திருத்தம் செய்ய வேண்டும்.

நடப்பாண்டிற்கான செட்டியூல் ஆப் ரேட் அரசு தயாரிக்கும் போது ஜல்லி, ப்ளூ மெட்டல் போன்றவற்றின் விலையை 10 சதவீதம் விலையேற்ற கட்டணம் என்ற வகையில் நிர்ணயம் செய்ய வேண்டும்.

தற்போது நெடுஞ்சாலை துறையினர் ஜல்லி, எம் சாண்ட்,ப்ளூ மெட்டல் விலை ஏற்றத்தை கண்டித்து ஸ்ட்ரைக்கில் ஈடுபட்டு வருகின்றனர். பாராளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் கோவை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் நல சங்கத்தினரும் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட தயாராகி வருகிறார்கள்.

கவுன்சிலர்கள் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தினர் கேட்டுக் கொண்டதால் தேர்தல் நேரத்தில் முக்கிய திட்ட பணிகளை முடித்து தர வேண்டி இருப்பதால் ஸ்ட்ரைக்கை தள்ளி வைத்திருந்தோம். கோவை மாநகராட்சி பகுதியில் குடிநீர் விநியோகம், குப்பை அகற்றும் பணிகள் தவிர்த்து மற்ற பணிகளை நிறுத்தி வரும் மார்ச் 10,11,12 ஆகிய மூன்று நாட்கள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில் ஒப்பந்ததாரர்கள் அனைவரும் பங்கேற்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.‌ஜல்லி,எம் சாண்ட் போன்றவற்றின் மார்க்கெட் விலையில் செட்டியூல் ஆப் ரேட் மாற்றி உரிய விலை ஏற்றம் செய்து தர வேண்டும் என அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறோம்.

மேலும் படிக்க