March 4, 2025
தண்டோரா குழு
மூட்டு தேய்மானம் என்பது இளம் வயதினர் முதல் பெரியவர்கள் வரை வரக்கூடிய ஒரு முக்கிய பிரச்சனையாக உள்ளது. 30 வயதிற்குக் கீழே உள்ளவர்களுக்கு மூட்டுக்களில் தேய்மானம் அல்லது வலி ஏற்படுகிறது என்றால் விளையாட்டு அல்லது விபத்துகளில் ஏற்படும் காயங்களால்தான் காரணமாக இருக்கும்.
அதுவே, 40வயதிற்கு மேல் பலருக்கும் உடலில் தேய்மானம் ஏற்பட்டு மூட்டு ஜவ்வுகளில் சிதைவுகள் ஏற்படத் தொடங்கும். அதனால் எலும்புத் தேய்மானம் மற்றும் ஜவ்வு பிய்ந்துபோகும் பிரச்சனைகள் ஏற்படும். ஜவ்வு தசைகள் பிய்ந்துபோனால் சீக்கிரம் மூட்டு தேய்ந்துவிடும். குறிப்பாக, மூட்டுப் பகுதியில் உள்ள Meniscus
எனும் ஜவ்வு தேய்ந்து பிய்ந்துவிடுவதால், மூட்டுக்களில் கடுமையான வலி ஏற்படும். நடப்பதற்கே கஷ்டமாக இருக்கும். மூட்டுப்பகுதியில் வீக்கமும் ஏற்படும். கால்களை மடக்கி நீட்டுவதில் சிரமம் ஏற்படும். நடந்தால் கால் வழுக்கிவிடுவது போலவும் இருக்கும்.
கால்களை மடக்கி சற்று நேரம் உட்கார்ந்து இருந்தால், கால் பிடித்தது போல் ஆகிவிடும். இந்தச் சிரமங்கள் ஒருவருக்கு ஏற்பட்டால், அவர் அன்றாட வாழ்க்கையை நடத்துவதே பெரிதும் பாதிக்கப்படும். அவரால் தனது வேலைகளை இயல்பாகச் செய்ய முடியாது எனவே, இந்தப் பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அனுகி எக்ஸ்ரே பரிசோதனை செய்து எலும்புத் தேய்மானத்தைக் கண்டறிய வேண்டும். முற்றிலுமாக எலும்புத் தேய்மானம் இருந்தால் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும்.
புதுமையான மருத்துவ தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்தும் பாரம்பரியத்தின் அடுத்த கட்டமாக கே.எம்.சி.ஹெச் அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரோபோட்டிக் மூட்டு மாற்று கருவியை அறிமுகம் செய்து 750-க்கும் மேலான மிகத்துல்லியமான அறுவை சிகிச்சைகள் செய்துள்ளது. மேலும் மென்மையான திசுக்களைப் பாதுகாத்து நோயாளி விரைவில் குணமடையவும் உதவிகரமாக உள்ளது. செயற்கை நுண்ணறிவு துணையுடன் இயங்கும் இந்த கருவியானது. அறுவை சிகிச்சையை சுலபமாகவும் விரைவாகவும் செய்துமுடிக்க உதவுகிறது. மேம்பட்ட துல்லியம், எலும்புகள் மீது மிகவும் கச்சிதமாக இம்பிளாண்டுகள் பொருத்துதல், நோயாளியின் மூட்டு அமைப்புக்கு ஏற்றவாறு பிரத்யேக சிகிச்சை, அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மிக குறைவான வலி மற்றும் வீக்கம் ஆகியவை இந்த ரோபோட்டிக் தொழில்நுட்பத்தினால் கிடைக்கும் முக்கிய பலன்களாகும். நோயாளி விரைவில் குணமடைவதால் மருத்துவமனையில் தங்கும் காலம் குறைவாகும்.
இந்த அதிநவீன இயந்திரங்கள் அளிக்கும் அனுகூலங்களை நோயாளிகள் எளிதில் பெற்றுப் பலனடைய வேண்டும் என்ற நோக்கத்துடன் கேஎம்சிஹெச் ஒரு ரோபோட்டிக் மூட்டு மாற்று முகாமிற்கு ஏற்பாடுகள் செய்துள்ளது. 2025 மார்ச் 1 முதல் ஏப்ரல் 30-ம் தேதி வரை கேஎம்சிஹெச் மருத்துவமனையில் நடைபெறும் இம்முகாமில் ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை 20% சலுகைக் கட்டணத்தில் அளிக்கப்படுகிறது இந்த முகாம் மூலம் 200-க்கும் மேற்ட்பட்டவர்களுக்கு ரோபோட்டிக் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து பலன்பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.பொதுமக்கள் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள அழைக்கவும்: 7418887411.