March 8, 2017 தண்டோரா குழு
தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் வரும் 16-ம் தேதி தொடங்குகிறது. பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார்.
இது குறித்து சட்டப்பேரவை செயலர் புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில்
“தமிழ்நாடு சட்டப்பேரவைத் தலைவர் பேரவையின் அடுத்தகூட்டத்தை, மார்ச்16- ம் தேதி காலை 10.30 மணிக்கு கூட்டியுள்ளார்கள். அதில் 2017-2018-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை மற்றும் மானியக் கோரிக்கைகளை சட்டப்பேரவைக்கு அளிக்க வேண்டுமென்று ஆளுநர் கேட்டு கொண்டுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பட்ஜெட்டை நிதியமைச்சர் ஜெயக்குமார் தாக்கல் செய்கிறார். எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட் தாக்கல் குறித்து தொழில்துறையினர் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.