April 3, 2025
தண்டோரா குழு
ஸ்கோடா ஆட்டோ இந்தியா இந்தியாவில் தனது 25 ஆண்டுகால வரலாற்றில் சாதனை படைக்கும் மாத விற்பனையை பதிவு செய்ததாகும். மார்ச் 2025-இல் ஸ்கோடா ஆட்டோவானது 7,422 யூனிட்டுகளை விற்று இந்த பிராண்டின் மிக அதிக மாத விற்பனை என்ற சாதனையை படைத்துள்ளது.
இந்த சாதனையானது அதன் முற்றிலும் புதிய கைலாக் எஸ்யூவி -ன் அறிமுகம் மற்றும் ரன்வீர் கபூர், விழிப்புணர்வு மற்றும் பரிசீலனையை ஊக்கப்படுத்தும் வகையில் அதன் முதல் பிரான்ட் சூப்பர்ஸ்டார் ஆனது போன்றவற்றிற்கு உடனடி பிறகு நிகழ்ந்தது.
ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் பிரான்ட் இயக்குனரான பீட்டர் ஜனேபா இந்த விற்பனை மைல்கல்லை பற்றி கருத்து கூறுகையில்,
“முற்றிலும் புதிய கைலாக்கின் அறிமுகத்துடன் எங்கள் இந்திய பயணத்தில் ஒரு ‘புதிய சகாப்தத்திற்கு’ நாங்கள் எங்களை அர்பணித்துகொண்டோம். மார்ச் 2025-ல் நாங்கள் 7.422 கார்கள் விற்பனை செய்தது என்பது இப்பயணமானது தன் வடிவத்தை பெறுவதின் சான்றாகும் மற்றும் இது இந்திய சாலைகளில் ஐரோப்பிய தொழில்நுட்பத்தை ஜனநாயகப்படுத்துவதன் நிலையான திட்டமிடல், பிரயத்தனங்கள் மற்றும் யுக்தி ஆகியவற்றின் பலனாகும். வாடிக்கையாளர் கருத்துக்கள் ஆனவை கைலாக் ஆனது மிகசிறந்த விலை-விழுமிய மதிப்பீட்டுடன் வருகிறது என்பதை முன்னிலைப்படுத்துகிறது மற்றும் இதைவிட அதிக பிரிவிலுள்ள சௌகரியம், இடைவெளி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அவற்றை 4-மீட்டருக்கும் குறைந்த எஸ்யூவி பிரிவில் புகுத்துகிறது.
மேலும் அதிக வாடிக்கையாளர்களுக்கு ஆற்றலூட்டவும் கைலாக் வெற்றியை கொண்டாடவும் நாங்கள் இந்த அறிமுக விலையை ஏப்ரல் இறுதிவரை நீட்டிக்க முடிவெடுத்துள்ளோம்,” என்று விளக்கினார்.இந்தியாவில் ஸ்கோடா ஆட்டோவின் மிகப்பெரிய மாதத்தை உந்துசெலுத்தியது எதுவென்றால் பிப்ரவரி 2025-ல் அறிவிக்கப்பட்ட மிக சமீபத்தில் உள்நுழைந்த கைலாக் ஆகும். இக்கார் ஆனது இந்தியாவால் பெயரிடப்பட்டது மற்றும் நவம்பர் 2024-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் டெலிவரிகள் ஜனவரி 2025-ல் தொடங்கின மற்றும் இது ஸ்கோடா ஆட்டோ இந்தியாவின் முதல் 4 எம் -க்கும் குறைவான எஸ்யூவி ஆகும்.இது 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற ஸ்கோடா கார்களின் அணிவகுப்பில் நுழைவு முனையாகும். குஷாக், ஸ்லாவியா மற்றும் கைலாக் ஆகியன பெரியவர் மற்றும் குழந்தை பாதுகாப்பு ஆகிய இரண்டிற்கும் முழு ஃபைவ் ஸ்டார்கள் பெற்றவை. குஷக் மற்றும் ஸ்லாவியா இரண்டும் குளோபல் என்சிஏபி- ஆல் சோதிக்கப்பட்டன மற்றும் கைலாக் ஆனது பாரத் என்சிஏபி -ஆல் சோதிக்கப்பட்டது.
அதிகரிக்கும் தேவையை பூர்த்தி செய்வதற்கு கைலாக் ஆனது உற்பத்தியில் மிக வேகமான ரேம்ப்-அப் ஐ பெறவுள்ளது. இதன் நோக்கம் என்னவென்றால் ஆக்டிவ் புக்கிங்க்சை கொண்ட அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் (15,000 க்கும் அதிகம்) மே மாதத்திற்குள் டெலிவர் செய்வதாகும்.