March 13, 2022 தண்டோரா குழு
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக தெலுங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் விமானம் மூலம் கோவை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
அப்போது விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,
கொரோனா இல்லாத நாடாக இன்று இந்திய உள்ளது எனவும் அதற்கு காரணம் 180 கோடி தடுப்பூசி போட்டதால் தான் என்றும் அதற்கு காரணம் மத்திய மற்றும் ,மாநில அரசுகளின் பங்களிப்பு என தெரிவித்தார். இனி வரும் காலங்களிலும் தொடர்ச்சியாக அனைவரும் முககவசம் கட்டாய அணிய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தெலுங்கானாவில் ஆளுநர் உறையில்லாமல் சட்டமன்ற தொடங்கியிருக்கிறது. அதனை பெரிது படுத்தவில்லை மக்களுக்காக அதை நான் விட்டுவிட்டேன் எனவும் மக்களுக்கான திட்டங்கள் செயல்படுத்த வேண்டும் என்பதே எனது நோக்கம்.அதனால் நான் அதை நான் பெரிதாக எடுத்து கொள்ளவில்லை எனவும் கூறினார்.
ஆளுநர்களும் முதலமைச்சர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் எனது கருத்து எனக்கூறிய அவர், சில நேரங்களில் ஆளுநர்கள் சரியாக நடந்து கொள்வது கூட தவறாக முன்னிறுத்தப்படுவதாக விமர்சித்தார். மத்திய அரசின் இல்லாத மாநிலங்களில் சிறு சிறு விஷயங்களுக்கு கூட பெரிதாக முன்னிறுத்தப்படுகிறது என்றும் என்னை பொருத்தவரை அனைத்து ஆளுநர்களும், மக்களுக்காக செயலாற்றுப்பவர்கள் என்பதுதான் எனது கருத்து என்று தெரிவித்தார்.
மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் குறித்து நான் கருத்து கூற விரும்பவில்லை எனவும் கூறினார்.
குடியரசு தலைவர் பதவிக்கு உங்களின் பெயர் பரீசிலிக்கப்படுவதாக சொல்லபடுகிறது என்ற செய்தியாளரின் கேள்விக்கும் எவ்வித கருத்தும் சொல்ல முடியாது எனவும் நான் ஒரு சாதாரண குடிமகள் தான் எனவும் தெரிவித்தார்.
மேலும் மார்ச் 27 ஆம் தேதி முதல் புதுச்சேரி மாநிலத்தின் விமான சேவை துவங்க இருக்கிறது என கூறிய அவர் பல்வேறு கட்ட முயற்சிக்கு பின் இந்த சேவை கிடைக்கப்பெற்றுள்ளது எனவும் அதற்கு நான் பிரதமருக்கும் ,விமான துறை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்கிறேன் எனவும் கூறினார். புதுச்சேரி வளர்ச்சிக்கு விமான சேவை முக்கியம் என கூறிய அவர் புதுச்சேரி சுற்றுலாதுறை வளர்ச்சியடைவதற்கும் ,புதுச்சேரியொட்டியுள்ள கடலூர் ,நாகை, திருவாரூர் மக்களுக்கு இது உதவிகரமாக அமையும் எனவும் தெரிவித்தார்.
இந்த விமான சேவை புதுச்சேரி – பெங்களூர் பெங்களூர் – ஹைதராபாத் நகருக்கும் இருக்கும் என்றும் நான் அதில் முதல் பயணம் மேற்கொள்ள இருக்கிறேன் எனவும் கூறினார்.