• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாற்றுதிறனாளி மாணவியின் வேண்டுகோளை ஏற்ற பள்ளிக்கல்வித்துறை

June 9, 2017 தண்டோரா குழு

பத்தாம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்ற மாற்றுதிறனானி மாணவியின் வேண்டுகோளை தொடர்ந்து அவர் படித்த பள்ளியிலேயே காமர்ஸ் பாடப்பிரிவை பள்ளிக்கல்வி துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

கோவை சீரநாயக்கன்பாளையத்திலுள்ள அரசு பள்ளியில் நடந்து முடிந்த பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வில் ப்ரீத்தி 468 மதிப்பெண் பெற்றார். அவள் ஒரு மாற்றுதிறனாளி.

இதனையடுத்து அவர் இந்த கல்வியாண்டில் பதினொன்றாம் வகுப்பு சேர விரும்பினார்.அவர் படித்தப் பள்ளியில் கம்ப்யூட்டர் சயின்ஸ், உயிரியல், அறிவியல் முதன்மை பாடமாகக் கொண்ட (Pure Science), மற்றும் தொழிற் கல்வி பாட பிரிவுகள் தான் உண்டு. அந்த பாட பிரிவுகளில் ஒன்றை தேர்ந்தெடுத்தால், தன்னால் நின்றுக்கொண்டு செய்முறை வகுப்புகளில் கலந்துக்கொள்ள முடியாது. இதனால், பள்ளியில் வர்த்தக பாடபிரிவை ஆரம்பிக்க மாநில கல்வித்துறையிடம் கோரிக்கை வைத்தார்.

அவருடைய கோரிக்கையை ஏற்ற கல்வித்துறை, இரண்டு நாட்களுக்கு முன், கல்வி ஆண்டு தொடங்கிய புதன்கிழமை முதல் அந்த பள்ளியில் வர்த்தகப்பாடத்தை ஆரம்பிக்க அரசாங்க உத்தரவை வெளியிட்டது. அந்த பாட சேர்க்கைக்கு ப்ரீத்தி தான் முதல் மாணவி.

“என்னால் மற்ற இடங்களுக்கு சென்று படிக்க முடியாத காரணத்தால், சீரநாயக்கன்பாளையத்திலுள்ள அரசு பள்ளியில் 11, 12ம் வகுப்பிற்கு வர்த்தக பாடபிரிவை ஆரம்பிக்க கோரிக்கை விடுத்தேன். கடந்த 2௦௦9ம் ஆண்டிற்கு பிறகு, வர்த்தக பாடபிரிவில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக இருந்ததால், அந்த பாடத்தை நிறுத்திவிட்டனர். வகுப்பில் என்னால் உட்கார முடியாது, இதனால் படுத்துக்கொண்டே பாடத்தை கவனிப்பேன். அனைத்து பாடங்களையும் என்னால் நன்றாக புரிந்துக்கொள்ள முடியும். நான் ஒரு கலெக்டராகி ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறேன்” என்று ப்ரீத்தி தெரிவித்தார்.

ப்ரீத்தியின் தாயார் புவனேஸ்வரி கூறுகையில்,

“எனக்கும் என் கணவருக்கும் ப்ரீத்தி ஒரே மகள். அவளை நான் தினமும் பள்ளியில் கொண்டு வந்து விடுவேன். 1௦ம் வகுப்பு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றாள். தன்னுடைய 11 மற்றும் 12ம் வகுப்பை அதே பள்ளியில் படிக்க விரும்பினாள். பள்ளி நிர்வாகம் எங்களுக்கு அதிகமாக உதவியது. வர்த்தக பாட பிரிவையும் தொடங்கியுள்ளது” என்று கூறினார்.

அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் வி. சரவணன் கூறுகையில்,

“இந்த பள்ளி கடந்த 1967ம் ஆண்டு தொடங்கப்பட்டது. வரும் ஜூன் 25ம் தேதியோடு, இப்பள்ளியின் 5௦ம் ஆண்டு விழாவை இப்பள்ளியின் முன்னாள் மாணவர்கள் உதவியுடன் கொண்டாட இருக்கிறோம்” என்று கூறினார்.

மேலும் படிக்க