June 13, 2017 தண்டோரா குழு
டெல்லியில் மத்திய சட்டத்துறை இணையமைச்சர் பி.பி.சௌத்ரியுடன், நடிகை வரலட்சுமி இன்று சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தார்.
நடிகை வரலட்சுமி பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக நடிகை வரலட்சுமி ஒரு அமைப்பை தொடங்கியுள்ளார். இதையடுத்து, ஒவ்வொரு மாவட்டத்திலும் மகிளா நீதிமன்றங்கள் அதிகளவில் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று சந்தித்து பேசினார்.
இந்நிலையில், இன்று நடிகை வரலட்சுமி டெல்லியில் மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் பி.பி.சவுத்ரியை சந்தித்து மாவட்டந்தோறும் மகளிர் நீதிமன்றங்கள் அமைக்கக்கோரியும் பெண்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்க கூடுதலாக நீதிபதிகளை நியமிக்கவும் அமைச்சரிடம் மனு கொடுத்துள்ளார்.
அப்போது மகளிர் நீதிமன்றம் அமைப்பது குறித்து பிற மாநில முதலமைச்சர்களுக்கும் கடிதம் எழுத உள்ளதாக இணையமைச்சர் சௌத்ரி உறுதியளித்துள்ளார்.