July 17, 2023
தண்டோரா குழு
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்த ஒருவர் காய்கறி வெட்டும் கத்தியை புதிதாக வாங்கி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் ஆட்சியர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில் ஏராளமான பொதுமக்கள், அரசியல் அமைப்பினர், விவசாயிகள் உள்ளிட்ட பலர் தங்களது கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
ஆட்சியர் அலுவலகம் வருவோர் போலீசார் சோதனைக்கு பின்பே அனுப்பப்பட்டனர். அப்படி சோதனை செய்யும் போது ஒருவர் காய்கறி வெட்டும் கத்தியை புதிதாக வாங்கி தனது பையில் வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் அவரிடம் விசாரிக்கையில் டவுன்ஹால் பகுதியில் வீட்டு தேவைக்காக புதிதாக காய்கறி வெட்டும் கத்தியை வாங்கியுள்ளதாகவும், மனு அளித்துவிட்டு வீட்டிற்கு செல்ல உள்ளதாகவும் கூறினார்.
போலீசார் அவரிடம் இருந்த கத்தியை பெற்றுக்கொண்டு பின்னர் மனு அளிக்க அனுமதி அளித்தனர். இதனால் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.