December 27, 2022 தண்டோரா குழு
கோவை விளாங்குறிச்சி கரட்டுமேடு பகுதியில் பகுதியில் தேங்காய் ஆயில் குடோன் வைத்து தொழில் செய்து வருபவர் சிவலிங்கம். இந்நிலையில் இடம் தொடர்பான விவகாரத்தில் சிலர் அத்து மீறி நுழைந்து குடோனை சேதப்படுத்தி,உள்ளே இருந்த பொருட்களையும் கொள்ளையடித்து சென்றதாக கோவில் பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளார்.
இந்நிலையில் காவல் துறையினர் குடோனை சேதப்படுத்தி பொருட்களை திருடி சென்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் கோவில் பாளையம் காவல் நிலையை ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர்கள் தம்மை அலைகழிப்பதாக பாதிக்கப்பட்ட சிவலிங்கம் என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறி இவருக்கு ஆதரவாக அகில இந்திய இந்து நாடார் பேரவையினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக உண்ணாவிரதம் இருக்க போவதாக கூறி அமர்ந்தனர். உடனடியாக காவல் துறையினர் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து மனுவை வழங்கினர்.
இது குறித்து அகில இந்திய இந்து நாடார் பேரவையின் நிறுவன தலைவர் முருகேச பெருமாள் கூறுகையில்,
தொடர்ந்து வழக்கு பதியாமல் கோவில் பாளையம் காவல்துறையினர் மற்றும் மேலதிகாரிகள் அலைகழிப்பதாகவும், மேலும் இந்த விவகாரம் தற்போது மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு வழங்கியுள்ளதாகவும், மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.