February 11, 2017 தண்டோரா குழு
நிகழ்ச்சியில் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்சேல் ஒபாமா நடுவராக வரவுள்ளார்.
“ ஜூனியர் மாஸ்டர் செப்” என்னும் சமையல் நிகழ்ச்சியை இங்கிலாந்து நாட்டின் பி.பி.சி. தொலைக்காட்சி நிறுவனம் ஆண்டு தோறும் நடத்தி வருகிறது. இதில் 9 முதல் 12 வரை உள்ள சிறுவர் ,சிறுமிகள் பங்கு பெற்று சமையல் செய்து அசத்துவார்கள். பலவிதமான சமையல் போட்டிகளுக்கு பிறகு அதில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்படுவார் . அவருக்கு “ ஜூனியர் மாஸ்டர் செப்” பட்டம் வழங்கப்படும்.
வழக்கமாக முன்னாள் ஜூனியர் மாஸ்டர் செப்கள் நடுவர்களாக இருப்பார்கள். ஆனால் இந்தாண்டு நடுவராக அமெரிக்கா முன்னாள் அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா நடுவராக வரவுள்ளார். அவருடன் பிரபல சமையல் நிபுணர்கள் மற்றும் பிரபலங்கள் உடன் இருப்பார்கள் என நிகிழ்ச்சி குழு அறிவித்துள்ளது.
மிச்சேல் ஒபாமா எப்பொழுதும் ஆரோக்கியமான உணவு குறித்து பரிந்து பேசி வருப்பவர். 2௦15ம் ஆண்டு, பள்ளிகளில் மதிய உணவு நேரத்தில் வழங்கப்படும் ஆரோக்கியமற்ற உணவு விளம்பரங்களுக்கு எதிராக போராட சபதம் எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.