April 30, 2022 தண்டோரா குழு
கோயம்புத்துரை சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனமான செல்லக்ஸ் பேட்டரி சிஸ்டம்ஸ் பிரைவேட் லிமிடெட், அடுத்த 6 மாதங்களுக்குள் மி்ன்சக்தி சேமிப்பு தீர்வை அறிமுகப்படுத்துகிறது.
இதன் முதல் கட்டமாக, அதிநவீன ஆற்றல் சேமிப்பு தீர்வினை உற்பத்தி வசதியுடன் கோவையில்,அதிநவீன மின்கலன் மேலாண்மை தீர்வுடன் இணைந்து மேம்படுத்தவுள்ளது. இந்த நிறுவனம்,மரபுசாரா எரிசக்தி சேமித்தல், வணிகம் மற்றும் குடியிருப்புகளுக்கான சேமிப்பு, ராணுவம், மின்சார வாகனங்கள், தொலை தொடர்பு, சுரங்கம், வின்வெளி மறறும் பிற அடிப்படை கட்டமைப்பு திட்டங்களில் இந்த மின்சேமிப்பு கலனை பயன்படுத்த முடியும்.
இந்த நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரியுமான பிரமோத் மாதவன் பேசுகையில்,
“ஆற்றல் சேமிப்பு தீர்வுகளுக்கான சந்தை வரும் 2030ம் ஆண்டு வாக்கில் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இருக்கும் என மதிப்பீடு செய்துள்ளோம். செல்லக்ஸ் பேட்டரிகள், அடுத்த தலைமுறைக்கான தொழில்நுட்பத்துடன், 10 ஆண்டுகள் சிறப்பாக செயல்படுவதுடன் 15 ஆண்டுகள் வரை ஆயுள் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம்.
நீண்ட ஆயுள், செயல் திறன் மற்றும் போட்டி விலை ஆகியவற்றால், நாட்டின் முன்னணி மின் ஆற்றல் சேமிப்பு தீர்வை தரும் தனித்துவமிக்க பேட்டரியாக இருக்கும்,” என்றார்.
இணை நிறுவனர் ஜோஸ் கே ஜோசப் பேசுகையில்,
“செல்லக்ஸ் முதல் கட்டமாக10 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை திரட்டவும், இரண்டாம் கட்டமாக 25 மில்லியன் அமெரிக்க டாலர் விரிவாக்க திட்டத்தையும் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. இந்தியாவல் செல் உற்பத்தியை தொழில்நுட்ப மாற்றத்தை கொண்டு 3வது கட்ட திட்டத்தை துவக்கவுள்ளது. அடுத்த 3 முதல் 5 ஆண்டுகளுக்குள் துவக்கப்படும் இந்த திட்டத்தால், 1000 பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவர்,” என்றார்.