October 20, 2021 தண்டோரா குழு
உத்தரப்பிரதேச மாநில சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் அங்கு ரிசர்வ் மற்றும் பயிற்சிக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் உத்தரப்பிரதேச மாநில தேர்தல் பயன்பாட்டுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக கோவை கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிக்கு ஒதுக்கப்பட்ட ரிசர்வ் மற்றும் பயிற்சிக்காக பெறப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், மதுக்கரை வட்டாச்சியர் அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட அறையில் வைக்கப்பட்டிருந்தன இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அறையின் சீல் மதுக்கரை வட்டாச்சியர், நாகராஜ் தலைமையில் திறக்கப்பட்டு பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினரின் முன்னிலையில் பலத்த பாதுகாப்புடன்,கொண்டு செல்லப்பட்டன.
இதில் அ.தி.மு.க.புறநகர் தெற்கு மாவட்ட வழக்கறிஞர் அணி பிரிவின் செயலாளர் மற்றும் முன்னாள் அரசு வழக்கறிஞர் தாமோதரன், மற்றும் வழக்கறிஞர்கள் ராமச்சந்திரன் ஆறுச்சாமி ஆகியோர் உடன் இருந்தனர். நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் மற்றும் பயிற்சிக்காக பெறப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்களை உத்தரபிரதேச பொதுத்தேர்தல் பயன்பாட்டுக்கான மாவட்ட EVM சேமிப்பு கிடங்கிற்கு பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது.