• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மின்வாரியத்தில் 8,905 மின்மாற்றி அமைக்கும் பணி நிறைவேற்றம் அமைச்சர் செந்தில்பாலாஜி பேட்டி

March 26, 2022 தண்டோரா குழு

மின்சார வாரியத்தை மேம்படுத்த ரூ.625 கோடியில் 8,905 மின்மாற்றி அமைக்கும் பணிகள் முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

கோவைக்கு தமிழக முதல்வரிடம் சிறப்பு நிதி பெற்று பல்வேறு திட்ட பணிகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து கோவை மாநகராட்சி தமிழ்நாடு நிலையான நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.34.93 கோடி மதிப்பீட்டில் 51.35 கி.மீ., நீளத்திற்கு 205 எண்ணிக்கையிலான சாலை அமைக்கும் பணிக்கு அனுமதி பெறப்பட்டது. இதில், முதற்கட்டமாக கடந்த ஜனவரி மாதம் 6.07 கி.மீ., நீளத்திற்கு ரூ.8.18 கோடிக்கு 4 சாலை பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

இந்நிலையில், கோவை மாநகராட்சிக்குட்பட்ட 26வது வார்டு பீளமேடு பயனீர் சாலையில் ரூ.22 லட்சம் மதிப்பீட்டில் சுகாதார ஆய்வக மையம் கட்டுதலுக்கான பூமி பூஜையை இன்று காலை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்தார்.

இதையடுத்து 28வது வார்டு ஜெயில் ரோடு, இளங்கோ நகர், விளாங்குறிச்சி, வெள்ளக்கிணறு விசுவாசபுரம், சின்னவேடம்பட்டி, அப்பநாயக்கன் பாளையம், கவுண்டம்பாளையம், அன்னை சத்யா நகர் ஆகிய பகுதிகளில் ஆரோக்கிய மையம் கட்டும் பணி, முத்தண்ணன் குளத்தில் தார்சாலை புதுப்பித்தல் ஆகிய பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி துவக்கி வைத்த பின்பு நிருபர்களிடம் கூறியதாவது:

தமிழக முதல்வர் கோவையின் வளர்ச்சி பணிகள், அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறார். பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு நிதி உதவி வழங்கி வருகிறார். 25 ஆயிரம் பயனாளிகளுக்கு அரசின் நலத்திடங்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் இன்று கோவை மாநகராட்சியில் 63 சுகாதார மைய கட்டிடத்துக்கு ரூ.15.75 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.
இதில், முதற்கட்டமாக இன்று 7 இடங்களில் அதற்கான பணிகள் துவங்கப்பட்டுள்ளன. ரூ.8.18 கோடி மதிப்பீட்டில் ஏற்கனவே, பணிகள் துவங்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக இன்று 10.5 கி.மீ., தூரத்துக்கு ரூ.7.14 கோடியில் 53 சாலை பணிகள் துவங்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் குப்பை எடுப்பதற்கு கூடுதலான வாகனங்கள் தேவை என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டதையடுத்து மாநகராட்சி மேயர், துணை மேயர், மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரின் கோரிக்கைகளை ஏற்று 105 டாடா ஏஸ் வாகனங்களுக்கு ரூ.7.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியின் சாலை வசதிகளை புதுப்பிப்பதற்கும், அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும் நிதியை முதல்வர் தொடர்ந்து வழங்கி வருகிறார். அதன்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கோவையில் சில பகுதிகளில் நடைபெறும் மின்பராமரிப்பு பணிகளை மின்வெட்டு என்று தவறாக எடுத்துக்கொள்ள கூடாது. மின்வாரியத்தை மேம்படுத்தும் வகையில் சீரான மின் விநியோகம் கிடைக்க ரூ.625 கோடி மதிப்பீட்டில் 8,905 புதிய மின்மாற்றி அமைப்பதற்கான பணிகள் முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 1 லட்சம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு என்ற சிறப்பு வாய்ந்த திட்டத்தை முதல்வர் துவக்கி வைத்தார். அதன்படி, நேற்று வரை 96 ஆயிரம் விவசாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த மாத இறுதிக்குள் மீதமுள்ள 4 ஆயிரம் பேருக்கும் கொடுக்கப்படும். கடந்த ஆட்சியில் கோவை மாநகராட்சியில் சாலை வசதிகள் உள்ளிட்ட எதுவும் நடைபெறவில்லை. எனவே, அதற்கான பணிகள் போர்க்கால அடிப்படையில் நிறைவேற்ற முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து மாநகராட்சிக்குட்பட்ட 13 வார்டுகளில் ரூ.9.12 கோடி மதிப்பீட்டிலான பூமி பூஜைகளையும், முடிந்த பணிகளையும் துவக்கி வைத்தார். மேலும், 7 இடங்களில் தலா ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் நகர்ப்புற ஆரோக்கிய மையம் கட்ட பூமி பூஜை போடப்பட்டது. இன்று முதற்கட்டமாக 8 பணிகள் துவங்க மொத்தம் ரூ.9.12 கோடி மதிப்பீட்டில் 13 பூமி பூஜைகள் நடந்தது.

இந்நிகழ்ச்சிகளில் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா, மேயர் கல்பனா ஆனந்தகுமார், துணை மேயர் வெற்றிச்செல்வன், திமுக மாவட்ட பொறுப்பாளர்கள் நா.கார்த்திக், பையா ஆர்.கிருஷ்ணன், முன்னாள் எம்.பி., நாகராஜ், முன்னாள் மேயர் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க