September 27, 2023 தண்டோரா குழு
தமிழ்நாடு மின்நுகர்வோர் சங்கமானது (டீகா) தமிழ்நாட்டில் உள்ள உயர் மின்னழுத்த நுகர்வோரை உறுப்பினர்களாக கொண்டுள்ளது.
மின்சாரத் துறை உற்பத்தி, விநியோகம் மற்றும் விதிமுறைகளில் ஏற்பட்ட மாற்றங்களுக்கு ஈடுகொடுக்க தொழில்துறை நிறுவனங்கள் இணைந்து தமிழ்நாடு மின்நுகர்வோர் சங்கத்தை (டீகா) 1998-ம் ஆண்டில் ஏற்படுத்தின. டீகா அமைப்பில், ஜவுளி, இன்ஜினியரிங், ரசாயணம், உரம், மருந்துகள், ஆட்டோமொபைல், உதிரி பாகங்கள் தயாரிப்பாளர்கள், தேயிலை தோட்டங்கள் போன்ற 700 நிறுவனங்கள் உறுப்பினர்களாக உள்ளனர். தற்போது இவர்கள் 1379 மெகாவாட் திறன் மின்சாரத்தை பயன்படுத்துகின்றனர்.
டீகா வெள்ளி விழா ஆண்டு கொண்டாட்டம்:
டீகா வின் வெள்ளி விழா கொண்டாட்டம் கோவை ரேடிசன் ப்ளு ஓட்டலில் செப்டம்பர் 22-ம் தேதி நடந்தது. டீகா தலைவர் பிரதீப் தலைமை வகித்து பேசுகையில், டீகாவின் வளர்ச்சி குறித்து விளக்கினார். தமிழ்நாடு மின்சாரத்தை பயன்படுத்துவதில் பல மாற்றங்களுக்கு உட்பட்டு வருகிறது. மரபுசாரா எரிசக்திக்கும் மின்சிக்கன பயன்பாட்டிற்கும் மாறி வருகிறது.
கடந்த பல ஆண்டுகளாக டீகா, அதிகபட்ச கேட்பு கட்டணம், மின்சாரத்துக்கான வரி, சுய மின் உற்பத்திக்கான வரி போன்ற பிரச்னைகளை கையாண்டு வருகிறது. சென்னை உயர்நீதிமன்றம் முதல் உச்சநீதிமன்றம் வரை பல்வேறு பிரச்னைகளுக்காக வழக்கு தொடர்ந்து வெற்றியையும் பெற்றுள்ளது. மத்திய மாநில ஒழுங்கு முறை ஆணையத்திற்கு பல்வேறு ஆலோசனைகள், பரிந்துரைகள், ஆட்சேபணைகளையும் அளித்து வந்துள்ளது. பல்வேறு நிறுவனங்களுடன் இணைந்து மின்சார துறையில் பயிற்சி திட்டங்கைளயும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறது.
வெள்ளி விழா கொண்டாடும் இந்த நேரத்தில், தமிழ்நாட்டிற்கு நிலையான, நியாயமான மற்றும் வாடிக்கையாளர்களுக்கு தேவையான மின் ஆற்றலை பெற தொடர்ந்து செயல்படுவோம்,” என்றார்.
டீகா செயலாளர் அருண் அருணாச்சலம் பேசுகையில்,
“மின்சார துறையில், பல்வேறு கொள்கைகளை வடிவமைக்கவும், அவற்றில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டுவதிலும் டீகா பெரும் பங்கு வகித்து வருகிறது” என்றார்.
சிறப்பு விருந்தினராக முன்னாள் எம்.பி.,யும் இந்திய சோலார் சங்க தலைவர், ராசி குழுமத்தின் தலைவருமான சி. நரசிம்மன் பேசுகையில்,
“இப்பொழுது மக்களுக்கு தங்கு தடையற்ற மின்சாரம் மிகவும் அவசியமாக உள்ளது. பழைய கட்டமைப்பு மற்றும் உபகரணங்களுடன் இயங்கும் வுயுNபுநுனுஊழு நிறுவனம் தொடர்ந்து பெரும் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிதி நிறுவனங்களும் இதன் வளர்ச்சிக்கு கடன் வழங்குவதில் தயங்குகின்றன. இதனால் விவசாயிகளுக்கும் தொழிற்சாலைகளுக்கும் பொது மக்களுக்கும் தேவையான மின்சாரத்தை சரியாக வழங்க இயலவில்லை. இதற்கு கடந்த 40 ஆண்டுகளாக நம் தமிழகத்தில் இருந்த ஆட்சி தலைவர்கள் இத்துறையை சீர்படுத்த கவனம் செலுத்தாததே காரணம் ஆகும்.
மின் உற்பத்திக்கும், மரபுசாரா எரிசக்தியின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. மரபு சாரா எரிசக்தி திட்டங்களுக்கு நிதி உதவி அளிக்க மத்திய அரசு ஒரு தனி வங்கியை ஏற்படுத்தி குறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள் அளிக்க வகை செய்ய வேண்டும். மரபு சாரா எரிசக்தித் துறையில் முதலீடுகளுக்கு தமிழக அரசும் ஆதரவு அளிக்க வேண்டும் என்றார்.
நிகழ்ச்சியில், டீகா முன்னாள் தலைவர்கள் பழனிசாமி, வரதராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.