• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மின் கோபுரம் அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்த மின்சாரத்துறை முயற்சி – விவசாயிகள் சங்கத்தினர் குற்றச்சாட்டு

March 21, 2022 தண்டோரா குழு

விவசாயிகளிடம் கருத்து கேட்காமலும் நஷ்ட ஈடு தராமலும் மின் கோபுரம் அமைக்க விவசாய நிலத்தை கையகப்படுத்த மின்சாரத்துறை முயற்சித்து வருவதாக விவசாயிகள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து சங்கத்தின் மாவட்டத் தலைவர் சு.பழனிச்சாமி கூறுகையில்,

ஆனைமலை சுற்றுவட்டாரம் மற்றும் அங்கலக்குறிச்சி பகுதிகளில் அமைக்கப்பட்ட உயர் மின் கோபுரத்திற்கு இதுவரை மின்சாரத்துறை விவசாயிகளுக்கு எந்த நஷ்ட ஈடும் வழங்கவில்லை.இதனிடையே கூடுதலாக 22 மீட்டர் அளவு விவசாய நிலத்தை கையகப்படுத்த மின்சாரத்துறை முயற்சித்து வருகிறது.

விவசாய நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்காமலும்,இதுவரை கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு நஷ்ட ஈடு தராமலும் மின்சார துறை அதிகாரிகள் செயல்படுவது கண்டிக்கத்தக்கது. இதே போல் 15 ஆண்டுகளுக்கு முன்னர் பாசன சபை தேர்தல் நடந்தது. தற்போது இந்த தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவித்துள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு முந்தைய உறுப்பினர்கள் பட்டியலை வைத்துக்கொண்டு தற்போது தேர்தல் நடத்துவது நியாயமாகாது. எனவே இந்த தேர்தலை ஒத்திவைக்க வேண்டும்.” என்றார்.

மேலும் படிக்க