May 16, 2017 தண்டோரா குழு
ஆப்ரோ அமெரிக்க இனத்தை சேர்ந்த வேதியல் பட்டதாரியான கரா மெக்குல்லாக் மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்றுள்ளார்.
அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் மிஸ் அமெரிக்கா அழகிப் போட்டி நடைபெற்றது.இதில், அமெரிக்காவின் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கொலம்பியா மாவட்ட அழகியாக விளங்கிய கரா மெக்குல்லாக்(25) மிஸ் அமெரிக்கா பட்டத்தை வென்றுள்ளார்.
கரா மெக்குல்லாக் இத்தாலி நாட்டில் பிறந்தவர். அமெரிக்க நாட்டிற்கு திரும்பியதும் வெர்ஜினியா மாநிலத்தில் வளர்ந்தார்.தெற்கு கரோலினா பல்கலைக்கழகத்தில் படித்த வேதியியல் பட்டதாரியான இவர் அணு ஒழுங்குமுறை கமிஷன் நிறுவனத்தில் விஞ்ஞானியாக பணிபுரிந்து வருகிறார்.
அறிவியல்,பொறியியல்,கணிதம், மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகளில், பெண்களும் குழந்தைகளும் அதிகமாக ஈடுப்பட வேண்டும் என்று அவர்களை ஊக்கப்படுத்துவதே என் நோக்கம்” என்றார்.