May 18, 2016 தண்டோரா குழு
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி ஆட்டக்காரர்களில் யுவராஜ் சிங்கும் ஒருவர். இவர் கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்து அணி எதிரான டி20 போட்டியில் 6 பந்தில் 6 சிக்ஸர் அடித்து உலக சாதனை படித்தார்.
இவர் கடந்த சில ஆண்டுக்கு முன்பு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு தற்போது அதிலிருந்து வெற்றிகரமாக மீண்டு இப்போது இந்திய அணிக்காக விளையாடி வருகிறார்.
இந்த நிலையில் சமீபத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 17 சிறுவர்களை யுவராஜ் சிங்சந்தித்தார். இந்தச் சந்திப்பின்போது, புற்றுநோயை வெற்றிகொள்வதற்கான குறிப்புகள் சிலவற்றையும் அவர் அந்தச் சிறுவர்களுக்கு அவர் வழங்கினார்.
அந்தச் சந்திப்பின்போது ஒரு சிறுவன், “மீண்டும் நீங்கள் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்கள் அடிப்பீர்களா?” என்று கேட்டதற்கு, “நீங்கள் பிரார்த்தனை செய்தால் நிச்சயமாக ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை விளாசுவேன்” என்று சிரித்தபடி கூறினார்.
யுவராஜ் சிங், இங்கிலாந்துக்கு எதிராக 2007-ஆம் ஆண்டு ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர்களை விளாசியது,இந்திய கிரிக்கெட் வரலாற்றின் முக்கிய தருணங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.