March 16, 2017
தண்டோரா குழு
மீனவர்களுக்கு ரூ.85 கோடி செலவில் 5000 புதிய வீடுகள் கட்டித்தரப்படும் என்று நிதியமைச்சர் டி ஜெயகுமார் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப் பேரவையில் வியாழனன்று தாக்கலான நிதிநிலை அறிக்கையில்,
“நாட்டுப்படகு மீனவர்களுக்கு மானிய விலையில் ஆண்டுக்கு 3000 லிட்டரிலிருந்து 3400 லிட்டராக டீசல் வழங்கப்படும். எண்ணூர், காசிமேடு உட்பட 7 மீன்பிடி துறைமுகங்கள் ரூ.1105 கோடி செலவில் மேம்படுத்தப்படும். இயந்திர மீன்பிடி படகுகளுக்கான டீசல் 15,000 லிருந்து 18,000 லிட்டராக உயர்த்தப்படும்.
ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூரில் புதிய மீன்பிடி துறைமுகம் அமைக்கப்படும். மீனவர்களுக்கான நிவாரண உதவித்தொகை ரூபாய் 4,500 ஆக உயர்த்தப்படும். மீனவர்களுக்கு ரூ.85 கோடி செலவில் 5000 வீடுகள் கட்டித்தரப்படும்”
இவ்வாறு நிதியமைச்சர் டி ஜெயகுமார் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தார்.