December 16, 2017 தண்டோரா குழு
மீனவர்களை மீட்க தவறிய மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என மாநிலம் முழுவதும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் நடைபெற்றது.
ஆர்பாட்டத்தில் உயிரிழந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு 50 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் எனவும், அக்குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. மேலும், ஒகி புயல் குறித்து மீனவர்களுக்கு முன் எச்சரிக்கை அளிக்காததே மீனவர்கள் அதிகளவு உயிரிழப்புக்கு காரநம் எனவும், மாயமான மீனவர்களை மீட்க வேண்டும் எனவும் வலியுறுப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர்.