April 8, 2017 தண்டோரா குழு
சீனா பெய்ஜிங் நகருக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொது கழிப்பிடங்களிலிருந்து டிஸ்யூ காகிதங்கள் எடுத்து செல்வதை தடுக்க சீன அரசு முகத்தை ஸ்கேன் செய்யும் புதிய தொழில்நுட்ப முறையை அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
சீன அரசு தனது நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கான அடிப்படை வசதிகளை சுற்றுலா தளங்களில் மேம்படுத்தி வருகிறது. அந்த வகையில் கழிப்பிடங்களை பயன்படுத்துவோர், அதிலுள்ள டிஸ்யூ காகிதங்களை எடுத்து செல்வதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அதை தடுக்க கழிப்பிடங்களை எத்தனை பேர் பயன் படுத்துகின்றனர் என்று அறிந்துக்கொள்ள, முகத்தை ஸ்கேன் செய்யும் கேமராவை பொருத்தியுள்ளனர்.
“அங்கு வருபவர்கள் கேமரா முன் கட்டாயமாக நிற்கவேண்டும். அவர்களுடைய முகம் ஸ்கேன் செய்த பிறகு, 2 அடி நீள காகிதம் தரப்படும். அதைதான் அவர்கள் பயன்படுத்த வேண்டும். மேலும் வேண்டும் என்றால், மறுபடியும் முகம் ஸ்கேன் செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த புதிய தொழில்நுட்ப முறையை மேம்படுத்த சுமார் 23 ஆயிரம் கோடி ரூபாயை சீன அரசு செலவு செய்துள்ளது,” என்றார் சுற்றுலா அதிகாரி ஒருவர்.
சீனா சுற்றுலா துரையின் ஆராய்ச்சியாளர் ஜான் டான்க்மெய் கூறுகையில்,
“மக்கள் சுற்றுலா பற்றி அதிக ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
சுற்றுலா செல்லும்போது, டிஸ்யூ காகிதங்கள் பயன்படுத்த வேண்டிய நேரத்தில் இல்லாமல் போய்விட்டால் என்ன செய்வது என்று மக்கள் கவலைபடுகின்றனர். இதனால் அவர்களுக்கு கிடைக்கும் டிஸ்யூ காகிதங்களை எடுத்துச்சென்று விடுகின்றனர்.
இந்த முயற்சி தற்போது 90 சதவீதம் தன் வெற்றிபெற்றுள்ளது. இன்னும் 10 சதவீதம் பெற்றிபெருவது அவசியமாக இருக்கிறது என்றார்.