July 4, 2017 தண்டோரா குழு
முகநூல் நட்பால் சென்னையை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் தன் முகத்தை இழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தனியார் கல்லூரி ஒன்றில் கெளத்தூரை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பி.எஸ்.சி 2ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இவர் தனது முகநூல் பக்கத்தில் பல்வேறு பதிவுகளை பதிவிட்டுள்ளார். அவருடைய பதிவுகளைப் பாராட்டி முரளி என்ற நாராயணன் கருத்து பதிவிட்டு வந்திருக்கிறார். இதனால் இருவருக்கும் நட்பு ஏற்பட்டுசெல்போன் எண்களை பரிமாறிக்கொண்டுகாதலிக்க தொடங்கியுள்ளனர்.
ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் முடிவு செய்துள்ளனர். இதனால் கடந்த 30ஆம் தேதி கல்லூரி மாணவி வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார். இருவரும் கார் மூலமாக பெங்களூரு செல்லத் திட்டமிட்டுள்ளனர். ஆனால், கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே செல்லும் போது சாலையோரத்தில் இருந்த கோயிலில் வைத்து கல்லூரி மாணவியை முரளி திருமணம் செய்துள்ளார்.
இந்நிலையில்,குடும்பத்தினர் நம்மை பிரித்துவிடுவார்கள் அதனால் நாம் தற்கொலை செய்து கொள்ளலாம் எனக் கூறி திடீரென அருகிலிருந்த முந்திரி தோப்பிற்குமாணவியை முரளி அழைத்துச் சென்றுள்ளார். அங்கு முரளி மாணவி தலையில் மட்டும் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டுதப்பியோடிவிட்டார்.
இதனால் மாணவியின் அலறல் சப்தம் கேட்டு ஓடிவந்த அங்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். தலை,முகம் முழுவதும் எரிந்த நிலையிலிருந்த மாணவி கடலூர் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, மாணவி பெற்றோருடன்பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்.
மேலும், தப்பியோடிய முரளி என்கிற நாராயணனை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.