July 18, 2017
தண்டோரா குழு
இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமியை தாக்கியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகமது ஷமி. இவர் இம்மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளார். இவர் தெற்கு கொல்கத்தாவில் உள்ள கட்ஜூ நகரில் வசித்துவருகிறார்.
இந்நிலையில் ஷமி கடந்த சனிக்கிழமை வெளியில் சென்றுவிட்டுமனைவியுடன் காரில் வீட்டுக்குத் திரும்பிவீட்டின் முன்புறம் காரை நிறுத்தி கொண்டிருந்தார். இதற்கடையில் அவ்வழியாக பைக்கில் வந்த மூன்று நபர்கள் பாதையை அடைத்து வைத்துள்ளதாக கூறி வீட்டின் பாராமரிப்பளருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து அவர்களுக்குள் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதனால் அவர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஷமி ஈடுபட்டார். சமாதான முயற்சி பலனளிக்காத்தால் திடீரென கைகலப்பு ஏற்பட்டது. அப்போது பைக்கில் வந்தவர்கள் ஷமியை தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக ஷமி போலீசில் புகார் அளித்தார். அங்குகிருந்த சிசிடிவி உதவியுடன் விசாரணை நடத்திய போலீசார் ஜெயந்த சர்கார், ஸ்வரூப் சர்கார், ஷிவா ஆகியோரை கைது செய்தனர்.