June 12, 2017
தண்டோரா குழு
பெண்களுக்கான அமைப்பு தொடங்கிய நிலையில் நடிகை வரலட்சுமி சரத்குமார் முதல்வர் பழனிசாமியை சந்தித்து முக்கிய கோரிக்கைகள் வைத்துள்ளார்.
நடிகை வரலட்சுமி பெண்களுக்கு ஏற்படும் பாலியல் கொடுமைகளுக்கு எதிராக நடிகை வரலட்சுமி ஒரு அமைப்பை தொடங்கியுள்ளார். இந்நிலையில், இன்று அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நடிகை வரலட்சுமி,
பாலியல் பிரச்சனை, திருமண பிரச்சனை போன்றவற்றால் பாதிக்கப்படுவடுவது பெண்கள் தான்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மகிளா நீதிமன்றங்கள் அதிகளவில் அமைக்க வேண்டும்.அப்போது தான் பெண்களுக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிக்க முடியும் என்றார்.மேலும், இது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமியிடம் கோரிக்கை வைத்துள்ளதாகவும் வரலட்சுமி கூறினார்.