July 26, 2017
தண்டோரா குழு
பீகார் முதல்வர் பதவியில் இருந்து விலகிய நிதிஷ்குமாருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ஊழல் புகாரில் சிக்கிய பீஹார் துணை முதல்வர் தேஜஸ்வி விவகாரத்தில் ஒரு மித்த கருத்து எட்டாததால் முதல்வர் நிதிஷ் இன்று (ஜூலை 26) மாலை கவர்னர் கேசவ்நாத் திரிபாதியை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார்.
இந்நிலையில், நிதிஷ்குமார் ராஜினாமா செய்த சில மணித்துளிகளில், பிரதமர் நரேந்திரமோடி, அவரது முடிவை வரவேற்று, டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து மோடி தனது டுவிட்டர் பக்கத்தில்,
ஊழல், முறைகேடுகளுக்கு துணை போகாது, தீரத்துடன் முடிவெடுத்த நிதிஷ்குமாரின் நேர்மையை 125 கோடி இந்திய மக்களும் போற்றுவார்கள் என்றும் நாட்டின் ஊழலுக்கு எதிரான போரில் அரசியல் மாச்சரியங்களை கடந்து, நிதிஷ்குமார் பங்கேற்றிருப்பதை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.