August 29, 2017
தண்டோரா குழு
முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துனை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரின் சொத்துகளை கட்சிக்கு எழுதி வைக்க தயாரா என டி.டி.வி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ., வெற்றிவேல் சவால் விடுத்துள்ளார்.
இதுக்குறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
“பொதுக்குழு கூடிஎல்லோரும் கையெழுத்து போட்டு தான் பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அசாதாரண சூழ்நிலையில் சிறைக்கு செல்ல நேர்ந்தபோது சசிகலா, துணைப் பொதுச்செயலாளரை நியமித்தார்கள்.
துணை முதல்வர் ஓ.பி.எஸ் தான் இரட்டை இலை சின்னத்தை முடக்கினார். அப்போது முதலமைச்சர்,டி.டி.வி தினகரனுக்கு ஆதரவாக தொப்பி சின்னத்தில் வாக்கு கேட்டது உலகத்திற்கே தெரியும்.
நமது எம்ஜிஆர் நாளிதழ், ஜெயா டிவி ஆகியவற்றை சசிகலாவிடம் கேட்டு கட்சிக்காக எழுதி வைக்க நாங்கள் தயார். எடப்பாடி பழனிச்சாமி, ஓபிஎஸ், வேலுமணி, தங்மணி ஆகியோரின் சொத்துகள் மற்றும் அவர்களின் பினாமி சொத்துகளை கட்சிக்கு எழுதி வைக்க தயாரா.”
இவ்வாறு அவர் கூறினார்.