December 21, 2021 தண்டோரா குழு
கோவையை சேர்ந்த பெண் ஒருவர் ஏற்கனவே திருமணமான நிலையில், அதை மறைத்து இரண்டாவதாக திருமணம் செய்த பிறகு,மீண்டும் முதல் கணவருடன் சென்ற ,பெண் மற் றும் அவரது குடும்பத்தினர் மீது நடவடிக்கை எடுக்க கோரி மாநகர காவல் ஆணையரிடம் கணவர் புகார் அளித்துள்ளார்.
கோவையை அடுத்த கணுவாய் பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ். இவருக்கும், நரசிம்மநாயக்கன் பாளையத்தை சேர்ந்த முருகன்,மீனா ஆகியோரின் மகளான யாமினி என்ற பெண்ணுக்கும் கடந்த செப்டம்பர் மாதம் பெரியோரால் நிச்சயிக்கப்பட்டு முறைப்படி திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் திருமணமாகி மூன்று மாதமே ஆகிய நிலையில், யாமினி திடீரென காணாமல் போயுள்ளார்.இது குறித்து கணவர் விக்னேஷ் துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்து விசாரித்த நிலையில்,யாமினிக்கு ஏற்கனவே திருமணமான விபரம் விக்னேஷிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், யாமினிக்கு ஏற்கனவே சிவக்குமார் என்பவருடன் முதல் திருமணமாகி இருந்ததாகவும், இது அவரது பெற்றோருக்கு தெரிந்திருந்தும்,இரண்டாவதாக யாமினிக்கு திருமணம் செய்து வைத்த நிலையில்,யாமினி மீண்டும் முதல் கணவனுடன் சென்று விட்டதாக புகார் தெரிவித்துள்ளார்.கோவை மாநகர காவல் ஆணையருக்கு அளித்துள்ள புகார் மனுவில்,தன்னை திருமணம் செய்வதற்கு ஒரு வருடம் முன்பே சிவக்குமார் என்பவரை யாமினி மற்றும் அவரது குடும்பத்தார் அதை மறைத்து தமக்கு இரண்டாவதாக யாமினியை திருமணம் செய்து வைத்ததாகவும்,தற்போது மீண்டும் முதல் கணவருடன் சென்ற யாமினி மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த அவரது பெற்றோரின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு கொண்டுள்ளார்.
முதல் திருமணம் செய்ததை மறைத்து, இரண்டாவது கணவருடன் சென்ற பெண் மீது நடவடிக்கை கோரி வந்துள்ள விநோத மனு கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.