• Download mobile app
27 Nov 2024, WednesdayEdition - 3213
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முதியோர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் – கோவை மாவட்ட ஆட்சியர்

June 15, 2017 தண்டோரா குழு

முதியோர்களுக்கு பேருந்து, மருத்துவமனை, வங்கிமற்றும் அனைத்து இடங்களிலும் முன்னுரிமைஅளிக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

முதியேர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்புதினத்தை முன்னிட்டு முதியோர் மீதான வன்முறைக்கு எதிராக விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் உறுதிமொழி ஏற்க்கப்பட்டது.

கோவை மாவட்ட ஆட்சியரக அலுவலகத்தில் மாவட்ட சமூக நலத்துறை மூலம் இன்று குடும்பங்களிலும், சமூகத்திலும் மூத்த குடிமக்கள் உதாசினப்படுத்துவதையும், அவமதிக்கப்படுவதையும் தடுப்பதற்கான முதியோர்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பதற்கான உறுதிமொழியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் தலைமையில் அனைத்து அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது ;

“60 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களின் ஜனத்தொகையானது தற்போது வேகமாக வளர்ந்து வருகிறது. மேம்படுத்தப்பட்ட மருத்துவ சேவை, நல்ல ஊட்டச்சத்தான உணவு ஆகியவற்றால் தனிப்பட்ட மனிதனின் வாழ்நாள் நீட்டிக்கப்பட்டு வருவதால், 2050-ம் ஆண்டில் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர்களின் ஜனத்தொகை 14 சதவீதம் உயரும் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.

மக்கள் தொகையில் தற்போது வேகமாக அதிகரித்து வரும் முதியோர்களின் எண்ணிக்கை நம்மை மகிழ்ச்சியடைய செய்தாலும் வயது நிமித்தமாக ஏற்படும் தள்ளாமை மற்றும் இயலாமையை சோர்வின்றி உரிய வகையில் சமாளிக்க வேண்டிய கட்டாயமமும் நமக்கு உள்ளது.

முதியோர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகவும், அவர்கள் பாதுகாப்பான, கௌரவம் மிக்க வாழ்க்கையினை வாழ்வதற்காகவும், தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை அவர்களது நலனுக்காக செயல்படுத்தி வருகிறது.

முதியோர் நலன் தொடர்பான மத்திய அரசின் வழிகாட்டுதல்கள், சட்டங்களின் அடிப்படையில் மற்றும் தமிழக அரசின் முதியோர் நல கொள்கைகளின் அடிப்படையின் படி, பல்வேறு திட்டங்களையும் ஆதரவற்ற முதியோரைப் பராமரிக்க முதியோர் இல்லங்கள் நடத்துதல் ஆகியவற்றை அரசு தற்பொழுது சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.

முதியோர் மனோரீதியாகவும், பொருளாதாரரீதியாகவும், உடல் ரீதியாகவும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர். வளர்ந்து வரும் மக்கள் தொகை உடைந்து போன கூட்டுக் குடும்பம், பொருளாதார பற்றாக்குறை மற்றும் மேல் நாட்டு கலாச்சாரத்தின் சீரழிவு போன்றவை முதியவர்களின் மீதான அக்கறையை குறைக்கின்றது. ஆகவே நாம் முதியவர்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்கு சமுதாயத்தில் முக்கியத்தும் அளித்திட இந்த முதியோர் வன்கொடுமை விழிப்புணர்வு நாளில் நாம் ஒவ்வொருவரும் கீழ்க்கண்ட செயல்காளால் முதியோருக்கு உதவிட சூளுரை ஏற்போம்.

முதியோர்களிடம் கோபத்தையும், தகாத வார்த்தைகளால் பேசுவதையும் தவிர்ப்போம். முதியோர்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்தால் தட்டிகேட்போம். முதியோர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளுக்கு செவிகொடுப்போம். முதியோர்களை மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் காயப்படுத்துவதை தவிர்ப்போம். முதுமைகாலத்தில் முதியோர்களின் நலனில் அக்கறைகாட்டுவோம்.

முதியோர்களுக்கு பேருந்து, மருத்துவமனை, வங்கி மற்றும் அனைத்து இடங்களிலும் முன்னுரிமை அளிப்போம். முதியோர்களிடம் பேசுவதற்கு நேரம் ஒதுக்குவோம். முதியோர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்போம்.

முதியோர்கள் 1253 என்றகட்டணமில்லா உதவி எண் தொலைபேசியை சென்னையிலும், 1800-800-1253 என்ற தொலைபேசி ஏனைய தமிழகத்திலும் சட்டம் மற்றும் மருத்துவ உதவி, முதியோர் இல்லங்களில் சேர்க்கை, முதியோர் பாதுகாப்பு சட்டம் 2007 பற்றிய தகவல்கள் பெற உதவலாம்.”

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் துரை ரவிச்சந்திரன், மாவட்ட காவல் துணை ஆணையர் லட்சுமி , மாவட்ட சமூக நல அலுவலர் ஷெரின்பிலிப், மாவட்ட வருவாய் அலுவலர் (முத்திரைத்தாள்) சிதம்பரம் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க