March 30, 2017
தண்டோரா குழு
முத்தலாக் நடைமுறைக்கு எதிராக தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முத்தலாக் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இது குறித்து பதிலளிக்கும்படி, அனைத்திந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தது.
இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, முத்தலாக் தொடர்பான வழக்கை அரசியல் சட்ட அமர்வுக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும், மே 11ம் தேதி முதல் வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.