August 31, 2017 தண்டோரா குழு
கோவை மாவட்டத்திலுள்ள முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் த.ந.ஹரிஹரன் தகவல் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளதாவது,
“12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதல் மற்றும் இரண்டாம் மதிப்பெண் பெற்ற முன்னாள் படைவீரர்களின் சிறார்களுக்கு பரிசுத்தொகை வழங்கப்படவுள்ளது.
அதன்படி 2016-2017-ம் ஆண்டின் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முன்னாள் படைவீரர்களின் சிறார்களில் முதல் மதிப்பெண் மற்றும் இராண்டாம் மதிப்பெண் பெற்றுள்ளவர்களுக்கு தமிழ்நாடு முன்னாள் படைவீரர் நல நிதியிலிருந்து ரூ.5000, மற்றும் ரூ.3000, வழங்கப்படும். முன்னாள் படைவீரர் படைவிலகல் சான்றின்படி தமிழ்நாட்டைச் சார்ந்தவராக இருத்தல் வேண்டும்.
கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தில் பெயர் பதிவு செய்து அடையாள அட்டை பெற்றுள்ள முன்னாள் படைவீரர், சார்ந்தோர்கள் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற தங்களது சிறார்களின் மதிப்பெண் பட்டியல் நகல்கள், தங்களின் படைப்பணிச்சான்று மற்றும் அடையாள அட்டை ஆவணங்களுடன் கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்தை அணுகி உரிய விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.”
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.