• Download mobile app
29 Nov 2024, FridayEdition - 3215
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

முன்னாள் மாணவர்கள் கூட்டுமுயற்சி கோவையில் பாரம்பரிய வனத்தொகுப்பு..!

October 28, 2021 தண்டோரா குழு

தமிழகத்திலேயே முதல் முறையாக கோவையில் உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பாரம்பரிய மரக்கன்றுகளை மட்டும் உள்ளடக்கிய வனத்தொகுப்பு இன்று அமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் பொன்விழா ஆண்டு விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பல்வேறு நிகழ்ச்சிகள் வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் கடந்த 1975ஆம் ஆண்டு முதல் 1979 ஆம் ஆண்டு வரை இப் பல்கலைக்கழகத்தில் விவசாயம் மற்றும் தோட்டக்கலை துறையில் படித்த மாணவர்கள் ஒன்றாக இணைந்து பாரம்பரிய வனத்தொகுப்பை அமைத்துள்ளனர்.
மியாவாக்கி என்று அழைக்கப்படும் இந்த அடர்த்தியான வனத்தொகுப்பில் நாடு முழுவதும் இருந்து கொண்டுவரப்பட்ட 132 பாரம்பரிய தாவர வகைகள் நடவு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் குமார் கூறியதாவது:

தமிழகத்திலேயே முதல் முறையாக இத்தகைய பாரம்பரிய வனத்தொப்பு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வனத்தொகுப்பை அமைக்க முன்னாள் மாணவர்கள் இணைந்து ரூ.6.5 லட்சம் நன்கொடை வழங்கியுள்ளனர்.இந்த வனத்தொகுப்பில் நாடு முழுவதும் இருந்து பல்வேறு விதமான மரக்கன்றுகள் வரவழைக்கப்பட்டு நடவு செய்யப்பட்டுள்ளன.

காண்பதற்கு அரிய மரக்கன்றுகள் இங்கு நடவு செய்யப்பட்டுள்ளன. இதனால் இங்கு பயிலும் மாணவர்கள் பாரம்பரிய மரங்களை பற்றி தெரிந்து கொள்ள முடியும் அதோடு விவசாயிகளும் இந்த மரங்கள் குறித்து தெரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் என்.குமார்,தோட்ட கலை கல்லூரி முதன்மையர்
புகழேந்தி,மலரியல் துறை டாக்டர் ராஜாமணி, முன்னாள் மாணவர்கள் சேதுபதி, மோகன் குமார், வீரமணி, தேவசேனாபதி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்கள் மாணவர்கள் மற்றும் முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க