• Download mobile app
25 Nov 2024, MondayEdition - 3211
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மு.க.ஸ்டாலினிடம் திமுகவை ஒப்படைக்க வேண்டும் என முதலில் சொன்னது பேராசிரியர் அன்பழகன் தான் – டி.ஆர்.பாலு பேச்சு

December 17, 2022 தண்டோரா குழு

பேராசிரியர் நூற்றாண்டு நிறைவு விழா திமுக பொதுக்கூட்டம் கோவை ராஜ வீதியில் நேற்று மாலை நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை வகித்தார். விழா பேரூரையை திமுக பொருளாரும், முன்னாள் மத்திய அமைச்சரும், எம்.பி.யுமான டி.ஆர்.பாலு ஆற்றினார். அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை உரை ஆற்றினார்.

அப்போது அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:

கோவை என்று சொன்னால் அது திமுகவின் கோட்டை. நகர்புறத்தின் உள்ளாட்சி தேர்தலின் வெற்றியை அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் வெற்றி பெறுவோம். கலைஞரின் பிரதிபலிக்கும் விதமாக பேராசிரியர் பல்வேறு சாதனைகளை மேற்கொண்டுள்ளார். குறிப்பாக கல்வித்துறையில் நிறைய செய்துள்ளார். கடந்த அதிமுகவின் ஆட்சியால் சீரழிக்கப்பட்ட நிதி நிலைமையை திமுக ஆட்சி சரி செய்துள்ளது. கோவையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 90 சதவிகிதம் சாலை பணிகள் நிறைவு. விமான நிலையம் விரிவாக்கம் 92 சதவீதம் நிறைவு. அதிமுக ஆட்சியில் போடமுடியாத ரோட்டை திமுக ஆட்சியில் போட்டுள்ளோம்.

மயிலாடுதுறையில் மழை காரணமாக மின் விநியோகம் பாதிக்கப்பட்ட போது 2600 மின் மாற்றிகள் 36 மணி நேரத்தில் முதல்வரின் வழிகாட்டுதலில் சீரமைக்கப்பட்டது. 24 மணி நேரத்தில் 20 மணி நேரம் உழைப்பவர் முதல்வர். இந்தியா டூடே பத்திரிக்கை ஆய்வின் படி பல்வேறு துறைகளில் தமிழகம் முதல் இடம். முதல்வர்களுக்கு எல்லாம் முதல்வராக நம் முதல்வர் உள்ளார். அன்னூர் தொழிற்பூங்காவிற்காக விவசாயிகளின் அனுமதி இல்லாமல் கண்டிப்பாக அவர்களது நிலம் எடுக்கப்படாது. சிலர் தவறாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். தனி நபர், விவசாயிகள் ஒப்புதல் இல்லாமல் அவர்களின் நிலம் எடுக்கப்படாது. இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் டி.ஆர்.பாலு பேசியதாவது:

வாட்ஸ் ஆப் வந்து நாட்டையே குட்டி சுவர் ஆக்கியுள்ளது. கரூரில் மிகப்பெரிய கூட்டத்தை நடத்த திட்டமிட்டுப்பட்டு கோவையில் சிறிய கூட்டத்தை அமைச்சர் செந்தில்பாலாஜி ஏற்பாடு செய்துள்ளார்.

தலைவர் கலைஞர் அப்போதைய பொதுச்செயலாளர் பேராசிரியர் மீது அளவு கடந்த அன்பு வைத்திருந்தார். பொதுச்செயலாளர் மீது எவ்வளவு அன்பு வைத்துள்ளாரோ கலைஞர் அதே அன்பு தொண்டர்கள் மீதுவும் வைத்துள்ளார். கலைஞர் போலவே முதல்வர் ஸ்டாலினும் அன்பு வைத்துள்ளார். பேராசிரியர் அவர்கள் 80 ஆண்டுகால பொதுச்சேவையில் இருந்துள்ளார். 40 ஆண்டுகாலம் பொதுச்செயலாளராக இருந்தவர். பேராசிரியர் துக்கத்தை வெளிகாட்ட கண்ணீர் விடமாட்டார். பேராசிரியரும் கலைஞரும் பாசமும் நேசமும் பொழிந்தவர்கள். இருவரது நட்பு 74 ஆண்டுகால நட்பு.

தலைவர் மு.க.ஸ்டாலினிடம் திமுகவை ஒப்படைக்க வேண்டும் என முதலில் சொன்னது பேராசிரியர் அன்பழகன் தான். திமுகவை முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிநடத்த வேண்டும் அதை நான் பார்க்க வேண்டும் என சொன்னார் பேராசிரியர்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் படிக்க