August 10, 2017
தண்டோரா குழு
திருவண்ணாமலையிலுள்ள மூக்குப்பொடி சாமியாரை சந்தித்து டிடிவி தினகரன் நேற்று ஆசீர்வாதம் பெற்றுள்ளார்.
அதிமுகவை வலுப்படுத்தும் வகையில் தமிழகம் முழுவதும் சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளதாக டிடிவி தினகரன் கடந்த சில தினங்களுக்கு முன் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் நேற்று திருவண்ணாமலையிலுள்ள மூக்குப்பொடி சாமியாரை சந்தித்து டிடிவி தினகரன் ஆசிர்வாதம் வாங்கியது போன்ற புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன.
அப்போது மூக்குபொடி சாமியார் இனி உனக்கு எல்லாம் நல்ல காலம் தான் என்று சொன்னதாக தினகரனின் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, டிடிவி தினகரனின் அறிவிப்புகள் எதுவும் அதிமுக அம்மா அணியினரை கட்டுப்படுத்தாது என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.