• Download mobile app
23 Nov 2024, SaturdayEdition - 3209
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மூடநம்பிக்கைகளுக்குத் திரும்பும் வெளிநாட்டினர்

May 14, 2016 தண்டோரா குழு.

ஒரு காலத்தில் வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வந்தவர்கள் இந்தியாவைப் பற்றி எழுதும்போது, இது பாம்பாட்டிகளின் நாடு, கல்வியறிவு இல்லாத நாடு மற்றும் மூடநம்பிக்கை இல்லாத நாடு என எழுதிவைத்தனர்.

ஆனால் தற்போது இந்தியாதான் அறிவியலின் தந்தை என்ற ரீதியில் அறிவியலின் பல்வேறு பிரிவுகளில் சிறந்து விளங்குகிறது. ஆனால் தொழிநுட்பம் என்ற பெயரில் வெளிநாட்டினர் பலர் மீண்டும் மூடநம்பிக்கை மற்றும் தேவையற்ற கற்பனையை வளர்த்துக்கொண்டு வருவது ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. உலகளவில் காலப்பயணம் (Time Travel) என்பது உண்மையோ, பொய்யோ தெரியாது ஆனால் அது சாத்தியம் என்று தினம் தினம் புகைப்படம் மற்றும் வீடியோக்கள் மட்டும் இணையதளத்தில் செய்திகள் வெளிவந்து கொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் இன்று நேற்று நாளை மற்றும் சூர்யாவின் 24 போன்ற படங்கள் காலப்பயணத்தை மையமாக வைத்து தமிழில் வெளிவந்தன.

எப்படி இருந்தாலும் ஒருவர் காலப்பயணம் மூலம் கடந்து செல்வது சாத்தியமில்லாத ஒன்றாகத் தான் இருந்து வருகிறது. ஆனால் இது சாத்தியமாக இருக்குமோ ? என்ற வகையில் ஒரு வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

லாஸ் வேகாஸ் நகரில் 1995 ஆம் ஆண்டு, ஆகஸ்டு 19 ஆம் தேதி மைக் டைசன் மற்றும் பீட்டர் மெக்நீலியிடையே நடைபெற்ற குத்துச்சண்டை போட்டி நடைபெற்றுள்ளது. இருப்பினும் இந்த வீடியோவானது செப்டம்பர் மாதம் 18 ஆம் தேதி 2015 ஆம் ஆண்டு யூட்யூபில் முதல் முறை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. தற்போது அந்த வீடியோ பெரும் வைரலாகி வருகின்றது. ஏனெனில் அந்த வீடியோவில் பார்வையாளர் ஒருவர் கையில் கேமரா போன் வைத்திருப்பது தெளிவாக பதிவாகியுள்ளது.

அதில் ஒருவர் தற்போது நாம் பயன்படுத்தும் கேமரா போன் ஒன்றை வைத்து போட்டியை புகைப்படம் எடுப்பது போன்ற காட்சிப் பதிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னெவெனில் 1995களில் கேமரா போன்கள் பயன்பாட்டிலே இல்லாதது தான் கூறப்பட்டுள்ளது.

தற்சமயம் யூட்யூபில் சுமார் 33 லட்சத்திற்கும் அதிகமானோர் பார்த்திருக்கும் இந்த வீடியோ தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்ப்படும்கிறது. மேலும் 1995 ஆம் ஆண்டு மக்களுக்குச் சற்றும் அறிமுகமில்லாத கேமரா போன் எப்படி பார்வையாளரிடம் வந்தது என்பதற்கான சரியான விளக்கம் அளிக்க உண்மை கண்டறியும் நிபுணர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனிடையே மற்றும் ஒரு உண்மை கண்டறியும் குழுவினர் இது வெறும் போட்டோ கேமராதான் என நிரூபித்துள்ளனர். இந்த கேமரா அந்தகாலத்தில் வெளிவந்த லோகிடெக் அல்லது காஸியோ மாடல் செமராவத்தான் இருக்கும் என உறுதியாகத் தெரிவித்துள்ளனர். அதற்கு ஆதாரமாக அந்த காலத்தில் இருந்த கேமரா மாடல்களை வெளியிட்டு உறுதி செய்துள்ளனர். இதில் தற்போதைய செல் போன் போலவே மூன்று மாடல்கள் இருந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதோடு, அந்த படமெடுக்கும் மனிதர் சுமார் நாற்பது முதல் ஐம்பது வயது உடையவராக இருப்பார் எனவும் இதுநாள் வரை அவர் உயிரோடு இருப்பாரா எனச் சந்தேகிப்பதாகவும் தெரிவித்துள்ளனர். அவ்வாறு இருந்திருந்தால் இது குறித்து விளக்கம் கொடுத்திருப்பார் எனவும் தெரிவித்துள்ளனர்.

ஆகா மொத்தம் வெளிநாட்டினர் தொழில் நுட்பம் என்ற பெயரில் மீண்டும் மூட நம்பிக்கையைப் பரப்பி வருவது உறுதியாகத் தெரிகிறது.

மேலும் படிக்க